நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு சிறப்பு விருது

இந்தியாவில் உயர்கல்வி துறையில் உன்னத நடிகர் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBILEE" "  என்ற சிறப்பு விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான “ICON OF GOLDEN JUBILEE" "  விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு இவ்விருது வழங்கப்படும் என்றும், விருது வழங்குவது தொடர்பாக ரஜினிகாந்துக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இம்மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பழம்பெரும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது. இதில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் இந்த விருதை வழங்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார் ரஜினி. கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் தன்னைக் கௌரவப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.